ஆவடி காவல் ஆணையரகம் துவங்கப்பட்டது முதல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி லின்படி போதைப்பொருள் பரவலை தடுப்பதில் “போதையில்லா தமிழகம் உருவாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றது. கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டிலேயே முதன்முறையாக 02.10.2022 அன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் இரவு மாரத்தான் நடத்தப்பட்டது. இது மாபெரும் வெற்றி பெற்றதுடன் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் சேகரிக்கப்பட்ட பதிவுக் கட்டணங்கள் ஒரு உள்னதமான காரணத்திற்காக எழும்பூரில் உள்ள குழந்தை சுகாதார நிறுவனம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த ஆண்டும் ஆவடி காவல் ஆணையரகம் போதைப்பொருளுக்கு எதிரான இயக்கத்தைத் தொடர திட்டமிட்டுள்ளது. இம்முறை ITF (இந்தியன் டிரையத்லான் கூட்டமைப்பு) மற்றும் சென்னை ரன்னர்ஸ் கிளப் இணைந்து போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் “ட்ரையத்லான்” நிகழ்ச்சிக்கு 1404 2023 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இந்த போட்டியை இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்வில் ஜூனியர் (16 & 17வயது). சீனியர் (18+ வயது) மற்றும் முதுநிலை (40 + வயது) ஆகிய 3 வகையான வயது பிரிவுகள் உள்ளன இந்த மூன்று வயது பிரிவினரும் 750 மீ நீச்சல், 20 கிமீ சைக்கிள் ஓட்டம் மற்றும் 4 கிமீ ஓட்டம் ஆகியவற்றை ஓடி முடிப்பர் இதுவரை 18 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து 500+ உள்ளீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இந்தியா CWG 2022 ஆசியக் கோப்பை போன்றவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் #10 இந்திய முந்தரப்பு வீரர்கள் அடங்குவர் இந்த கூட்டமைப்பு இந்த நிகழ்வை. தேர்வுச் சோதனையாகவும், வரவிருக்கும் ஆசிய விளையாட்டு 2021 னோவில் மற்றும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளுக்கான தகுதி நிகழ்வாகவும் பயன்படுத்துகிறது
இந்த நிகழ்வோடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக அதே நாளில் “டுயத்லான்” (Duathion) நிகழ்வையும் நடைபெறுகிறது டுயத்லான் என்பது ஓட்டம் மற்றும் சைக்கிள் ஒட்டுதல் ஆகியவற்றின் கலவையாகும். இதில் பங்கேற்பது எளிதானது. டூயத்லான் நிகழ்வில் 4 கிமீ ஓட்டம் 20 கிமீ சைக்கிள் ஓட்டம் மற்றும் 2 கிமீ ஓட்டம் ஆகியவை ஆகும் கூடுதலாக ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களுக்கு இலவச வாடகை சைக்கிள் போட்டி நிறைவு செய்ததற்க்கான பதக்கம் போட்டிக்கான உபகரணங்கள், ஓட்டத்தின்போது தீரிழப்பை தவிர்ப்பதற்காக நீர், குளிர்பானங்கள் மற்றும் பந்தயத்திற்கு பிந்தைய உணவு வழங்கப்படும்.
இந்த போட்டி மூலம் வசூல் செய்யப்பட்ட தொகையில் ரூ. 1.32,200 இயக்குனர் குழந்தைகள் நலம் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனை எழும்பூர் அவர்களிடம் நன்கொடையாக வழங்கப்படும். டிரையத்லான் மற்றும் டூயத்லான் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 1.00,000- மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும் மகளிர் டிரையத்லான் போட்டி மாலை 04 00 மணிக்கும் ஆண்கள் டிரையத்லான் போட்டி மாலை 04.20 மணிக்குத் தொடங்கும் மற்றும் டூயத்லான் ஆண்கள் & பெண்களுக்கான போட்டி மாலை 04 45 மணிக்கு துவக்கப்படவுள்ளது மேலும் சிறியவர். பெரியவர் மற்றும் முதுநிலை பிரிவுகளில் டிரையத்லான் மற்றும் டூயத்லானுக்கு போட்டிகளுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும் என ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.