சென்னையில் நடைபெற்ற மாபெரும் சுன்னத் ஜமாத் கொள்கை முழக்க மாநாடு

80

சென்னையில் மாபெரும் சுன்னத் ஜமாத் கொள்கை விளக்க மாநாடு எழும்­பூரில் விம­ரி­சை­யாக நடை­பெற்­றது. தமி­ழகம் முழு­வதும் சுன்னத் ஜமாத் கொள்­கை­களை வலி­யு­று­த்தி கொள்கை விளக்க மாநாட்­டினை சுன்னத் ஜமாத் அமைப்­பினர் விம­ரி­யைாக நடத்தி வரு­கின்­றனர். இதன் தொடர்ச்­சி­யாக சென்னை எழும்­­பூரில் மாபெரும் சுன்னத் ஜமாத் முழக்க மாநாடு நடை­பெற்­றது. சென்னை எழும்பூர் M. M. A மஹாலில் மதரஸா மாணவர்களுக்கான கொள்கை விளக்கப் பிரசங்கம் மௌலவி முஹம்மது சலீம் சிராஜி அவர்கள் தலைமை நடைபெற்றது. இதில் பல்வேறு அறிஞர்கள் பங்கேற்று உரைகளை நிகழ்த்தினார்கள்.

தமிழக முஸ்லிம் ஜமாத்தின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து நடத்தப்பட்டது நிகழ்வினை தமிழக முஸ்லிம் ஜமாத் மாநில தலைவர் செய்யது அப்துர் ரஹ்மான் பாகவி தலைமையேற்று நடத்தினர். பின்னர் எழும்பூர் பைஸ் மஹாலில் தமிழக முஸ்லீம் ஜமாத்தின் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சொற்பொழிவு அரங்கம் நடைபெற்றது. தமிழக முஸ்லிம் ஜமாஅத் மாநில தலைவர் சையது அப்துர் ரஹ்மான் பாகவி அஹ்ஸனி தங்கள் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹக்கீம் இம்தாதி வரவேற்றார், மாநில ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவர் டாக்டர். காஜா முய்னுதீன் ஜமாலி மாநாட்டை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு தலைமை அரசு காஜி டாக்டர். சலாவுதீன் முஹம்மது அய்யூப் சிறப்பு விருந்தினராகவும், தமிழக சிறுபான்மையினர் அமைச்சர் எஸ். எம். நாசர், இறையன்பன் குத்துஸ், ஜோ. அருண், நஜூமூத்தின், நௌவ்பல் உலுமி, முஹம்மது அன்வரி, ராஜா முஹம்மது, காயல் ஜெஸ்முத்தீன் முக்கிய பிரதிநிதியாக கலந்து கொண்டனர். சையத் சம்தானி மியான் அஷ்ரபி லக்னோ உருது விரிவுரை ஆற்றினார். மாநில நிர்வாகிகள் டாக்டர் மன்சூர் ஹாஜி, முஹம்மது சலீம் சிராஜி, தாஜுதீன் அஹ்ஸனி, முஹம்மது ஏறாமலை, கோவை சபீர் அலி ,ஹாரிஸ் ஸக்காபி, முன்னிலை வகித்தனர். ஷாஹுல் ஹமீது சிராஜி, முஹம்மது முஸ்தபா மஸ்லஹி, இஜாஸ்அஹமத் காதிரி,நிஜாமுதீன் அஹ்சனி ஆகியோர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கல ந்து கொண்ட இந்தியன் கிராண்ட் முப்தி அபூபக்கர் பாகவி அவர்கள் மத்திய அரசு கொண்டு வரதுடிக்கும் வக்ப் திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும், மேலும் இந்த சட்ட திருத்தங்களினால் வக்ப் வாரியம் மூடங்கி விடும் என்றும், முஸ்லீம் அறிஞர்கள், அமைப்புகளுடன் கலந்து பேசி பரிசிலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும் உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் பிரார்த்தனை செய்தார். விழாவில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக நூருதீன் ஸக்காபி நன்றியுரை கூறினார். பாத்திஹா பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.