தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

177

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை திடீர் இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று 11.10.2023 உத்தரவிட்டுள்ளது.

அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:

1. வன்னிய பெருமாள், டிஜிபி, சிவில் சப்ளைஸ் சிஐடி – டிஜிபி ஊர்க்காவல் படை.
2. தமிழ்ச்சந்திரன், ஐஜி நிர்வாகப்பிரிவு – தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம்
3. செந்தில்குமாரி, ஐஜி, தமிழ்நாடு, சீருடைப்பணியாளர் தேர்வாணையம் – கூடுதல் கமிஷனர், சென்னை
மத்தியக்குற்றப்பிரிவு.
4. மகேஷ்வரி, கூடுதல் கமிஷனர், சென்னை மத்திய குற்றப்பிரிவு – போலீஸ் கமிஷனர், திருநெல்வேலி, மாநகரம்.
5. ஜோஷி நிர்மல் குமார் – ஐஜி, தமிழ்நாடு போலீஸ் அகாடமி – ஐஜி, சிவில் சப்ளைஸ் சிஐடி
6. திஷா மிட்டல், டிஐஜி, காத்திருப்போர் பட்டியல் – டிஐஜி டெக்னிக்கல் சர்வீஸ்.
7. அபிஷேக் திக்ஷித், போக்குவரத்து இணைக்கமிஷனர், வடக்கு சென்னை – இணைக்கமிஷனர், வடக்கு, சட்டம் ஒழுங்கு
சென்னை.
8. சாமுண்டீஸ்வரி, இணைக்கமிஷனர், வடசென்னை – டிஐஜி, தலைமையிடம், சென்னை.
9. சுரேஷ் குமார், எஸ்பி, திருவாரூர் – எஸ்பி, தென்காசி.
10. சாம்சன், எஸ்பி, தென்காசி – எஸ்பி, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு.
11. ஜெயகுமார், எஸ்பி, சிபிசிஐடி – எஸ்பி திருவாரூர்.
12. பிரபாகர், எஸ்பி, நீலகிரி – எஸ்பி கரூர்
13. சுந்தரவதனம் எஸ்பி ,கரூர் – எஸ்பி கன்னியாகுமரி.
14. ஹரிகிரன் பிரசாத், எஸ்பி, கன்னியாகுமரி – எஸ்பி, கடலோர காவல் குழுமம், ராமநாதபுரம்.
15. சுந்தரவடிவேல், எஸ்பி, கடலோர காவல் குழுமம், ராமநாதபுரம் – எஸ்பி நீலகிரி
16. தீபா சத்யன், எஸ்பி, கட்டாயக் காத்திருப்போர் பட்டியல் – உதவி ஐஜி, நிர்வாகப்பிரிவு.