தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று 13.03.2024 திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் இன்று (13.03.2024) மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் உடனிருந்தனர்.