சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் “சமூகநீதி நாள்” உறுதிமொழி ஏற்றனர்.
இன்று (15.09.2023) காலை 11.00 மணியளவில் வேப்பேரி காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.கபில்குமார் சி சரட்கர் (தலைமையிடம்) மற்றும் மகேஸ்வரி (மத்திய குற்றப்பிரிவு) தலைமையில், காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) கயல்விழி மற்றும் காவல் துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள். ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் “சமூகநீதி நாள்‘‘ உறுதிமொழியை ஏற்றனர்.