நெய்வேலியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால்

161

நெய்வேலியில் பாமகவின் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வடக்கு மண்டல ஐஜி கண்ணன், விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக் தலைமையில் அங்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கலவரத்துக்குள் கட்டுக்குள் வந்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். நெய்வேலியில் நிலைமை கட்டுக்குள் வந்தது;போலீசார் மீதும், போலீசார் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நெய்வேலியில் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்” என – டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.