ஏழைகளுக்கு இரங்கும் ‘சாந்தாகிருஷ்ணன் தொண்டு அறக்கட்டளை’ நிறுவனம்

100

சென்னை எம்ஜிஆர் நகரில் இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டு மனித உயிரை அச்சுறுத்தும் சமயங்களில் அங்குள்ள ஏழை மக்களின் தோழனாக சாந்தா கிருஷ்ணன் அறகட்டளை மனிதநேய செயல்பாடுகளை எந்த வித விளம்பரமும்
இன்றி அமைதியாக செய்து வருகின்றது.

கடந்த 3ம் தேதி 3 நாட்கள் சென்னையில் கோரத் தாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயலால் ஏராளமான ஏழை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அரசு அதிகாரிகள் சரியாக வந்து வெள்ள நிவாரண நடவடிக்கைகள்

மேற்கொள்ளவில்லை என்ற புகார் சென்னை நகரமெங்கும் இன்னொரு புயலாக வீசி வரும் நிலையில் சாந்தா கிருஷ்ணன் அறக்கட்டளை நிறுவனம் தங்கள் பகுதியான எம்ஜிஆர் நகர் கூவம் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தங்களால் இயன்ற சமூக பணியில் இறங்கியுள்ளனர்.

சென்னை – எம்ஜிஆர் நகரில் ‘சாந்தாகிருஷ்னன் தொண்டு அறக்கட்டளை’ சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்காக உணவு தயார் செய்து வழங்கி வருகின்றனர். சாந்தா

கிருஷ்ணன் அறக்கட்டளையின் நிர்வாகிகள் எம்ஜிஆர் நகர் வழக்கறிஞர் புகழேந்தி, திருமதி லட்சுமி பிரமேஷ் மற்றும் உன்னிக்கிருஷ்ணன் ஆகியோர் சார்பில் வழங்கப்பட்ட இந்த அன்னதானம் ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் எம்ஜிஆர் நகர் மட்டுமின்றி அதனை ஒட்டியுள்ள பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளனர்.