985 மனுக்களுக்கு தீர்வு: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தகவல்

179

ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசின் உத்திரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தின் படி ஆவடி போலீஸ் கமிஷனர் கடந்த தலைமையில் 05.07.2023ம் தேதி முதல் தொடர்ச்சியாக புதன் கிழமை தோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று 16.08.2023 நடத்தப்பட்ட குறை தீர்ப்பு முகாமில் நிலுவையில் இருந்த 132 புகார் மனுக்களில் 94 மனுக்கள் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 43 புதிய மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் இது நாள் வரை பெறப்பட்ட 1681 மனுக்களில் 985 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது. பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஆவடி காவல் ஆணையாளர் சங்கர்  தெரிவித்துள்ளார்.