ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணும் நிகழ்ச்சி இன்று ஆவடி ஆணையர் சங்கர்

தலைமையில் நடந்தது. கடந்த மாதம் 5ம் தேதி முதல் தொடர்ச்சியாக புதன் கிழமைதோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று 09.08.2023 நடத்தப்பட்ட குறை தீர்ப்பு முகாமில் நிலுவையில் இருந்த 133 புகார் மனுக்களில் 96 மனுக்கள் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 39 புதிய மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.