ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் அம்ரிதா விஸ்வ வித்திய பீடம் கல்வி நிறுவனம் இணைந்து சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிழ்ச்சியில் காவல் துணை ஆணையாளர் ஜெயலட்சுமி, அம்ரிதா விஸ்வ வித்திய பீடம் கல்லூரி முதல்வர், மற்றும் நிர்வாகத்தினர், சுமார் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பேரணியில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அங்கமாக மரக் கன்றுகள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.