சென்னை நகரில் குறைதீர் முகாமில் பொது மக்களின் 19 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அருண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் இன்று (20.08.2025) புதன்கிழமை காவல் ஆணையரகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து 19 புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இம்முகாமின் போது துணை ஆணையாளர் (எஸ்டேட் மற்றும் நலன்) ஹரிகிரன் பிரசாத் உடன் இருந்தார்.