ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

193

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையாளர் முன்னிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது.

சென்னை, ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆவடி போலீஸ் கன்வென்சன் சென்டரில், நடைபெற்றது. இந்த முகாமில் தீர்வு காணப்படாத 266 புகார் மனுக்களில் 182 மனுக்கள் விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு முடிக்கப்பட்டது. பொதுமக்களிடம் காவல் ஆணையாளர் நேரடியாக பெற்ற 40 மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த குறைதீர்ப்பு முகாமில் ஆவடி இணைக்கமிஷனர் விஜயகுமார் மற்றும் துணை ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் 600 பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த குறைதீர்ப்பு முகாம் வாரம் தோறும் புதன் கிழமைகளில் தொடர்ந்து நடைபெறும் என ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.