பொங்கல் திருநாளை முன்னிட்டு வேலூர், திருவள்ளூர், பெங்களூரு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பஸ்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால்
போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வதற்கு ஆவடி காவல் ஆணையரக போலீசார் பாகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் இன்று பூந்தமல்லி பகுதியில் சாலைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பஸ்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வது குறித்தும், பயணிகள் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.