விசி கட்சியின் நிர்வாகியும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வடபழனி காவல் நிலைய போலீஸார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்குடி பஞ்சாயத்து மெயின் ரோடு முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருபா முனுசாமி (வயது 32). சென்னை ஐகோர்ட் வக்கீலான இவர் கடந்த ஜூலை மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில் கிருபா கூறியிருந்ததாவது, ‘‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தித் தொடர்பாளரும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமனும் நானும் கடந்த 2 1/2 ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தோம். அவர் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறியும் என்னிடம் வாக்குறுதிகள் அளித்தார். ஆனால் அவர் சொல்லியபடி திருமணம் செய்ய மறுத்து விட்டார். என்னை காதலிப்பதாக கூறி ரூ. 13.7 லட்சம் பணம் வாங்கினார். அதில் ரூ. 12 லட்சத்தை திருப்பிக் கொடுத்து விட்டார். இன்னும் ரூ 1.7 லட்சம் திருப்பித்தர வேண்டும். என்னை காதலிப்பதாக சொல்லி பணம் வாங்கி மோசடி செய்த விக்ரமன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையிடம் புகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விக்ரமன் மீது நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டும்’’ என அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
அது தொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளததால் கிருபா விக்ரமன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கிருபா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனையடுத்து கோர்ட் விக்ரமன் மீது 406, 420 (நம்பிக்கை மோசடி), 376 (கற்பழிப்பு), பெண்கள் வன்கொடுமைச் சட்டப்பிரிவு 4, ஜாதி பெயரைச் சொல்லி திட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது உள்பட 13 பிரிவுகளின் கீழ் வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்யனர். கிருபா லண்டனின் வசித்து வருவதால் இணையதளம் மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை மூலம் வழக்கு பதிவு செய்வதற்கான உத்தரவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் விக்ரமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.