சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று (20.09.2023) மதியம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடமும் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது. சென்னை பெருநகர காவல் தலைமையிட இணை ஆணையாளர் கயல்விழி, துணை ஆணையாளர் மகேஷ்வரன் (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை) மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.