தாம்­பரம் காவல் ஆணை­ய­ர­கத்தில் புதிய காவல் நிலையம் உத­யம்: போலீஸ் கமி­ஷனர் அபின் தினேஷ் மோடக் திறந்து வைத்­தார்

130

தாம்­பரம் காவல் ஆணை­ய­ர­கத்தில் புதிய காவல் நிலையம் மேட­வா­க்கம் காவல் நிலையம் இன்று துவங்­கப்­பட்­டது. அதனை தாம்­பரம் கமி­ஷனர் அபின் தினேஷ் மோடக் திறந்து வைத்­தார். தமி­ழ­கத்தில் குற்­ற­ங்களை தடுக்கும் வகையில் புதிய காவல் நிலையங்கள் திறக்­கப்­படும் என முதல்வர் ஸ்டாலின் சட்­ட­ச­பையில் அறி­வித்தார். அதன்­படி அரசு ஆணை எண் G.O No.(Ms) No 348 Dated – 18.06.2024 ன் படி தாம்பரம் மாநகர காவல், பள்ளிக்கரணை மாவட்டம், சேலையூர் சரகத்திற்குட்பட்ட T-14 பள்ளிக்கரணை காவல் நிலையம் 2 ஆக பிரிக்­கப்­பட்­டுள்­ளது. மேடவாக்கம், கோவிலம்பாக்கம் மற்றும் நன்மங்களம் பஞ்சாயத்து க்குட்பட்ட பகுதிகளை இணைத்து புதிதாக மேடவாக்கம் காவல் நிலையம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதனை இன்று 18.07.2024 காலை 11 மணியளவில் தாம்­பரம் காவல் ஆணை­யாளர் அபின் தினேஷ் மோடக் திறந்து வைத்­தார்.