பரவும் புதிய மோசடி கலாச்சாரம்: எச்சரிக்கும் சென்னை நகர சைபர்கிரைம் போலீஸ்

174

சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றது. இந்த ஆண்டில் மோசடி ஆசாமிகள் புதிய வித்தையை சைபர்கிரைம் ஆசாமிகள் கையாள்கின்றனர். அது தொடர்பாக கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி மேற்பார்வையில் சென்னை நகர சைபர்கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம்: ஆன்லைன் டிரேடிங் மற்றும் முதலீடு செய்வதின் மூலம் அதிக பணம் ஈட்டலாம் என்கிற முறையில் மோசடிகளை சைபர்கிரைம் மோசடி கில்லாடிகள் தற்போது தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் வர்த்தக குறிப்புகள் மற்றும் பங்குசந்தை பற்றிய இலவச வகுப்புகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கும். பொதுமக்கள் இந்த விளம்பரத்தில் ஆர்வம் காட்டும் போது அந்த பக்கம் நேரடியாக தெரியாத ஒரு வாட்ஸ்அப் குழுவிற்கு செல்லும். பின்னர் அந்த அறியப்படாத வாட்ஸ்அப் குழுவிலிருந்து மோசடி செய்பவர்கள் பொதுமக்களை தொடர்பு கொண்டு அவர்களுடைய நம்பிக்கையை பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட பங்குகளை வாங்கவும் விற்கவும் இலவச வர்த்தக உதவிக் குறிப்புகளை வழங்குவதன் மூலம் பொதுமக்களை பணம் செலுத்த தூண்டுகிறார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு பொதுமக்களை தங்கள் செய்யும் முதலீட்டிற்கு பெரும் லாபத்தை ஈட்ட SEBIயின் கீழ் பதிவு செய்யப்படாத INSECG, CHS-SES, SAAI, SEQUOIA, GOOMI போன்ற அறியப்படாத Application -களை பதிவிறக்கம் செய்யுமாறு வலையை விரிக்கின்றனர்.

KOSDAQ&COSDAQ
Advanced Market Exchange Direct Link >>
binomo
Stock markets frauds you need to be aware of
Alpari
IPOHDFC
IPOHDFC
SEQUOIA
SEQUOIA
INSECG

மோசடி செய்பவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் IPO பங்குகளை வாங்குவதன் மூலம் பொதுமக்களை அறியப்படாத Application-களில் தங்கள் சுயவிவரத்தை பதிவு செய்து பங்கு வர்த்தகத்தில் தங்களை ஈடுபடுத்திக் ஈடுபடுத்திக் கொள்ள கொள்ள தொடங்குகின்றனர். பங்குகளை வாங்குவதற்கான தொகையை மோசடி செய்பவர் குறிப்பிடுகின்ற பல்வேறு அடையாளம் தெரியாத வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்கின்றனர். மேலும் இவர்கள் செலுத்தும் தொகை மற்றும் லாபம் ஆகியவற்றை அவர்கள் நிறுவி உள்ள போலி App-ல் உருவாக்கப்பட்டுள்ள போலி Virtual Wallet-ல் காட்டப்படும். பொதுமக்களை தங்கள் லாபப் பணத்தை Virtual Wallet -ல் இருந்து திரும்பப் பெற முயலும் போது, அவர்கள் தங்கள் லாபத்தை 50 லட்சங்கள் மற்றும் அதற்கு மேல் அடைந்தால் மட்டுமே பெற முடியும் என்று கூறுகின்றனர்.

மோசடி செய்பவர்களின் அறிவுறுத்தல்களின்படி பொதுமக்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் தங்கள் போலி Application-களில் மூலம் செய்யப்பட்ட வர்த்தகத்திற்காக ஈட்டிய லாபத்திற்கு வரித் தொகையை செலுத்த வலியுறுத்துகின்றனர். பொதுமக்கள் மேலும் பணம் செலுத்த மறுத்தவுடன், மோசடி செய்பவரின் தொடர்புகள் நிறுத்தப்படும் மற்றும் அனைத்து வாட்ஸ்அப் குழுவிலிருந்தும் மோசடி செய்பவரால் பொதுமக்கள் வெளியேற்றப்படுவார்கள். இந்த அனைத்து நடவடிக்கைளுக்குப் பிறகே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு இந்த மோசடியில் இழக்கப்பட்டதை உணர்கின்றனர்.

மேலும் இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்களை போலீஸ் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக அடையாளம் தெரியாத நபர்களின் பெயரில் வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்களை பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றி வருவதும், இத்தகைய குற்ற செயல்களில் ஈடுப்படும் குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு பொது மக்களை ஏமாற்றி வருவதால் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதில் சிரமம் ஏற்படுவதும் தெரியவருகின்றது.

பொதுமக்கள் அடையாளம் தெரியாத வலைதள இணைப்புகள், வாட்ஸ்ஆப் குழுக்கள், தொலைபேசி எண்களில் இருந்து தொடர்பு கொள்ளும் நபர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் முன்பின் தெரியாத நபர்களிடம் நம்முடைய தனிப்பட்ட வங்கி சார்ந்த மற்றும் பிற காரியங்களை தெரிவிக்க கூடாது என்றும், அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும், ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதள முகவரி https://cybercrime.gov.in-ல் புகார் தெரிவிக்கும்படியாகவும் சென்னை நகர காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகின்றனர்.