புதிய குடிநீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம், சீர­மைக்­கப்­பட்ட புற­ ­நோ­யா­ளிகள் பிரிவு: எஸ்பி பாலாஜி சர­வணன் திறந்து வைத்­தார்.

137

தூத்­துக்­குடி, ஆயுதப்படை குடியிருப்பில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் புதுப்பிக்கபட்ட காவலர் மருத்துவ புற நோயாளிகள் பிரிவு ஆகியவற்றை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று 11.09.2024 ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர்கள் குடும்பத்தை சேர்ந்த 2,000 பேர் வரை குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுமார் ரூபாய் 5½ லட்சம் செலவில் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை இன்று (11.03.2024) மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சேதமடைந்த ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள காவலர் மருத்துவ புற நோயாளிகள் பிரிவை தென்மண்டல ஐஜி டாக்டர் என். கண்ணன், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆகியோரின் முயற்சியால் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக புதிய மருத்துவ உபகரணங்களை வழங்கப்பட்டன. அந்த புதுப்பிக்கப்பட்ட காவலர் மருத்துவ புற நோயாளிகள் பிரிவை இன்று எஸ்பி பாலாஜி சர­வணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி நகர ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, உதவி ஆய்வாளர்கள் பிரம்மநாயகம், வெங்கடேசன், கௌசல்யா, அமுதரசு, காவலர் மருத்து புற நேயாளிகள் பிரிவு மருத்துவர் பிரிசில்லா உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.