தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவகத்தில் மாவட்டத்தில் நெல்லை சரக டிஐஜி மூர்த்தி, எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் மாவட்ட காவல்துறை அலுவலக பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் ஆண்டுக்கு ஒரு முறை திருநெல்வேலி சரக டிஐஜி வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி நேற்று (16.09.2024) தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு டிஐஜி மூர்த்தி வருகை தந்தார். மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை,

தனிவிரல் ரேகை பிரிவு, மாவட்டத்தில் இயங்கும் தடய அறிவியல் ஆய்வகம், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, புகைப்பட பிரிவு, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துப்பறியும் நாய்ப்படை பிரிவு ஆகியவற்றை டிஐஜி மூர்த்தி ஆய்வு செய்தார். எஸ்பி ஆல்பட் ஜான் முன்னிலையில் ஆய்வு செய்த டிஐஜி மூர்த்தி அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் துப்பறியும் நாய்ப்படை பிரிவில் உள்ள நாய்களின் ஆரோக்கியம் மற்றும் அதன் பராமரிப்பு குறித்து கேட்டறிந்து நாய்ப்படை பிரிவு காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.