தூத்துக்குடி தாளமுத்துநகரில் போலீசார் 33 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சத்யராஜ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், முனியசாமி மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் முருகேசன் ஆகியோர் நேற்று (16.09.2023) தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, தூத்துக்குடி கோமாஸ்புரம், ராஜீவ்காந்தி ஹவுசிங் போர்டு க்வாட்டர்ஸ் பகுதியில், அதே பகுதியை சேர்ந்த முகமது மகன் மொய்தீன் (40) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் எதிரி மொய்தீனை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 21,015- மதிப்புள்ள 33 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.