அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் கஞ்சா விற்ற நபர் கைது: 1 கிலோ 300 கிராம் பறிமுதல்

174

சென்னை அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் கஞ்சா விற்ற நபரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்பனை ரகசியமாக நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையிலான தனிப்படையினர் இன்று 20/11/2023 காலை 11.30 மணிக்கு அம்பத்தூர் ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது எண்ணூர், சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (எ) பாலாஜி (30) பாபு என்பவரைப் பிடித்து சோதனை நடத்தினர்.

அப்போது அவர் வைத்திருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் அந்திரா மாநிலம் சென்று கஞ்சா வாங்கி வந்து அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் இருக்கும் வெளிமாநில தொழிலாளிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரை அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.