மாமூல் வசூல்: கேளம்பாக்கம் டிராபிக் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவு
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கேளம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அன்புராஜ் என்பவர் வாகனம் தணிக்கையின் போது பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.

அது தொடர்பாக விசாரணை நடத்தும்படி தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவிட்டார். அதில் ஆய்வாளர் அன்புராஜ் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து ஆய்வாளர் அன்புராஜை பணி இடை நீக்கம் செய்து கமிஷனர் அபின் தினேஷ் உத்தரவிட்டுள்ளார்.