மீன் வியா­பாரி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்: கோர்ட் அதி­ரடி தீர்ப்பு: சிறந்த காவல் பணிபு­ரிந்த இன்ஸ்­பெக்­ட­ருக்கு பாராட்­டு

126

மீன் வியா­பாரி வெட்டிக் கொலை செய்­யப்­பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்­டனை விதித்­து கோர்ட் அதி­ரடி உத்­த­ரது பிறப்­பித்­துள்­ளது. குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­ட­னை பெற்­றுத்­தந்த இன்ஸ்­பெக்டர் ஜார்ஜ் மில்லர் உள்­ளிட்ட போலீ­சாரை உய­­ர­தி­கா­ரிகள் வெகு­வாக பாராட்­டினர்.

22.09.2019 அன்று சென்னை எம்­கேபி நகர் காவல் மாவட்ட எல்­லையில் உள்ள எம்­­கேபி நகரில் மீன் கடை­ வைப்­பதில் நடந்த முன்­வி­ரோ­தத்தில் மீன் வியா­பாரி ஜெகன் என்­பவர் கொலை செய்­யப்­பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்­பாக 2019ம் ஆண்டு எம்­கேபி நகர் இன்ஸ்­­பெக்­ட­ராக இருந்த (தற்­போது திரு­முல்­லை­­வாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்­­­பெக்டர், ஆவடி காவல் ஆணை­ய­ர­கம்) ஜார்ஜ் மில்லர் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்­தினார். ஜெகனை வெட்டிக் கொன்ற ரவு­டி­கள் பிரகாஷ் என்­கிற கட்டைப் பிரகாஷ், அருண்­குமார், பிரவீன் ராஜ் என்­கிற கருப்பு அஜித், அஜித் என்­கிற அஜி பிள்ளை, பாரதி மற்றும் மேக­நாதன் என்­கிற மேகா, நவீன்­குமார் என்கிற வாழைப்­பழ அப்பு ஆகிய 7 பேர் கைது செய்­யப்பட்­டனர். இந்த கொலை வழக்கு விசா­ரணை சென்னை 16வது கூடுதல் அமர்வு நீதி­மன்­றத்தில் நடை­பெற்று வந்­தது.

வழக்கு விசா­ரணை முடி­வ­­டைந்த நிலையில் இன்று கோர்ட்டில் தீர்ப்பு வழங்­கப்­பட்­டது. கொலை­யா­ளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆபிரகாம் லிங்கன் இன்று தீர்ப்­ப­ளித்தார். மொத்தம் 7 குற்றவாளி­களில் 3ஆவது குற்­ற­வாளி மேக­நாதன் என்­கிற மேகா, நவீன்­குமார் என்கிற வாழைப்­பழ அப்பு ஆகிய இரு­வரும் இறந்து விட்­ட­னர். மீதமுள்ள ஏ1 குற்­­ற­வா­ளி­யான பிரகாஷ் என்­கிற கட்டைப் பிரகாஷ், அருண்­குமார், பிரவீன் ராஜ் என்­கிற கருப்பு அஜித், அஜித் என்­கிற அஜி பிள்ளை, பாரதி ஆகிய 5 பேருக்கு ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்­ப­ளித்­துள்­ள­து. இந்த வழக்கில் புலன் விசா­ரணை நடத்தி குற்­றப்­பத்­­தி­ரிகை தாக்கல் செய்து உரிய சாட்­சி­களை கோர்ட்டில் ஆஜர்­ப­டுத்­தி சிறந்த புல­னாய்வு மேற்­­கொண்ட இன்ஸ்­பெ­க்டர் ஜார்ஜ் மில்லர் உள்­ளிட்ட போலீ­சா­ரை உயர் போலீ­ஸ் அதி­கா­ரிகள் வெகு­வாக பாராட்­டி­னார்கள்.