பெண்ணை கொலை செய்த உறவினருக்கு ஆயுள்: கொளத்தூர் போலீசார் நடவடிக்கை

210

சென்னை, அம்பத்தூர், மேனாம்பேடு, இளங்கோ நகர், காமதேனு தெருவைச் சேர்ந்தவர் குணசுந்தரி, 37. இவர் கடந்த 15.05.2020 அன்று குடும்பதகராறில் உறவினர் கணேஷ் என்பவரால் கொளத்தூர் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கணேஷ், 33 என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, அல்லிக்குளம் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (08.08.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது.

எதிரி கணேஷ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கணேஷ்க்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000- அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த V-6 கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.