சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட 40 மடிக்கணினிகளை வழங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் -2023 சட்டமன்ற கூட்ட தொடரில் காவல்துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணிபுரியும் விசாரணை அதிகாரிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்ற அறிவித்தார். அதன்படி இன்று (12.12.2023), சென்னை, வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ரூ. 24 லட்சம் மதிப்புள்ள 40 மடிகணினிகளை சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவில் பணிபுரியும் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி மற்றும் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள் உடனிருந்தனர்.