கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் 4 கிலோ கஞ்சாவுடன் கேரளா வாலிபர் கைது: ஆவடி காவல் ஆணையரகம் நடவடிக்கை

135

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் போதைப் பொருட்கள் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக இன்று (25.11.2023) 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் பேரில் அதிகாரிக் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாளுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன் கொரட்டூர் ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில்

கண்காணித்தனர். அப்போது கேரளா மாநிலம், கோட்டயம் பகுதியைச் சேர்ந்த தீபக் (20) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் சோதனை நடத்திய போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒடிசா மாநிலம் சென்று கஞ்சா வாங்கி வந்து கொரட்டூர் மற்றும் அம்பத்தூர் பகுதியில் இருக்கும் வெளிமாநில தொழிலாளிகளுக்கு அவர் விற்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் அவர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.