ஆவடி காவல் ஆணையரம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையில் தனிப்படை போலீசார் இன்று 06.08.2023 காலை 8.30 மணிக்கு பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது அங்கு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா பார்சலை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் கேரளா மாநிலம், பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பிபின் பிஜூ (எ) பிபின் மோன் பிஜூ (வயது 21) என்பது தெரியவந்தது. ஒடிசா மாநிலம் சென்று கஞ்சா வாங்கி வந்து அம்பத்தூர், பட்டரவாக்கம் பகுதியில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். அவரை போலீசார் கைது செய்து அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.