கரூர் மாவட்ட புதிய எஸ்பியாக ஜோஷ் தங்­கையா நிய­ம­னம்: தமி­ழக அரசு உத்த­ர­வு

93

கரூர் மாவட்டத்துக்கு புதிய எஸ்­பி­யாக ஜோஷ் தங்­கையாவை நிய­மனம் செய்து தமி­ழக அரசு உத்தர­விட்­டுள்­ளது.

கரூர் மாவட்ட எஸ்­பி­யாக இருந்த பெரோஸ்கான் அப்­துல்லா சென்னை ஆவடி துணை ஆணை­ய­ராக மாற்­றப்­பட்­டுள்ளார். கரூர் மாவட்­டத்­துக்கு புதிய எஸ்பியாக தமி­ழக பொரு­ளா­தாரக் குற்­றப்­பி­ரிவு எஸ்­பி­யாக இருந்த ஜோஷ் தங்­கையா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்று, டிஎஸ்­பி­யாக தமி­ழக காவல்­து­றையில் சேர்ந்த ஜோஷ் தங்­கையா சென்னை கீழ்­ப்­­பாக்கம் உதவிக்­க­மி­ஷனர் மற்றும் தமி­ழகத்தின் பல்­வேறு இடங்­களில் டிஎஸ்­பி­யா­கவும், பின்பு பத­வி உயர்வு பெற்­று சிலைக்­கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் எஸ்பி­யா­கவும், அத­னை­ய­டுத்து எஸ்­பி­யாக பதவி உயர்ந்து சென்னை தாம்­பரம் காவல் ஆணை­ய­ரகம் துவங்­கப்­பட்ட போது பள்­ளிக்­க­ரணை துணை ஆணையராகவும் நிய­மிக்­கப்­பட்­டவர். விரு­து­நகர் மாவட்­டத்தைச் சேர்ந்த இவர் எம்ஏ முது­கலைப் பட்டம் மற்றும் எம்பில் பட்டம் பெற்­றவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­து.