வேலூரில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 105 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

181

வேலூர் மாவட்டத்தில் ரூ. 15,75,000- லட்சம் மதிப்பிலான 105 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் போதைப் பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், ஐஜி ராதிகா மேற்பார்வையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 06.11.2023ம் தேதி ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் காவல் துணை கண்காணிப்பாளர், மத்திய நுண்ணறிவுப்பிரிவு (வடக்கு), மத்திய நுண்ணறிவுப்பிரிவு ஆய்வாளர் சென்னை மற்றும் அவரது குழுவினர் வேலூர் மாவட்டம், கிரிஸ்டீயான் பேட்டை சோதனைச் சாவடி அருகில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அப்போது அந்த வழியாக வந்த ஒரு அசோக் லைலாண்ட் லாரியை மடக்கி உள்ளே ஆய்வு செய்தனர். அப்போது உள்ளே கஞ்சா பார்சல்கள் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து லாரியில் கஞ்சாவை கடத்தி வந்த ஈரோட்டைச் சேர்ந்த சதாசிவம் (32), திருச்சி ஆண்டாள்கோவில் பாண்டீஸ்வரன் (26) ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்தனர். லாரியில் இருந்த ரூ. 15,75,000- மதிப்பிலான 105 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சாவை கடத்த பயன்படுத்திய லாரி ஆகியவற்யறை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்து திறமையாக பணியாற்றிய அதிகாரிகளை கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார். இதுபோன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா சேவை எண். 10581 அல்லது CUG NO. 9498410581-ஐ தொடர்பு கொண்டு தகவல்கள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல்கள் அளிப்பவர்களை பற்றிய விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போதைத்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.