ஓட்டேரியில் மனைவியை கொலை செய்த கணவர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

156

சென்னை, அயனாவரம், ஏகாங்கிபுரம் பகுதியில் வசித்து வந்த வாணி, 38, என்பவர் கடந்த 20.12.2021 அன்று இரவு கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து கொலையுண்ட வாணியின் தாய் சுலோச்சனா P-2 ஓட்டேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசரணை மேற்கொள்ளப்பட்டது. ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாணியின் கணவரான குற்றாளி ரமேஷ் என்பவரை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் தனிப்படை காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்படி கொலை வழக்கின் குற்றவாளி ரமேஷ், 41 என்பவரை இன்று (08.07.2023) கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ரமேஷ் இன்று (08.07.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.