சென்னை சித்தாலப்பாக்கத்தில் H & M Hospital: முன்னாள் போலீஸ் ஐஜி ராமசுப்பிரமணி திறந்து வைத்தார்
சென்னை சித்தாலப்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள H & M Hospital ஆஸ்பத்திரியை மத்திய மண்டல முன்னாள் போலீஸ் ஐஜி டாக்டர் ராமசுப்பிரமணி திறந்து வைத்தார்.

அவசர தேவைகளுக்காக சுமார் 5,000 குடும்பங்களுக்கு தொடர்பு மையமாக இந்த மருத்துவமனை செயல்படுகிறது. சமீபத்திய முன்னேற்றங்களின் அதி நவீன உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுடன், H & M மருத்துவமனை, மலிவு விலையில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை மக்களுக்கு உறுதியளிப்பதாக H & M Hospital நிர்வாக இயக்குநர்கள் Dr. Hariharan & Dr. Mithuna ஆகியோர் தெரிவித்தனர். சினிமா நடிகர் தாமு, சித்தாலப்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவர் ரவி, மின்வாரிய முன்னாள் தலைமை இன்ஜினியர் வேல்முருகன், தென்சென்னை காங்கிரஸ் பிரசிடெண்ட் வழக்கறிஞர் முத்தழகன், புதுவை மாவட்ட கலெக்டர் ஐஏஎஸ் அதிகாரி குலோத்துங்கன் மற்றும் வழக்கறிஞர் சுடர் உள்ளிட்ட ஏராளமானபேர் ஆஸ்பத்திரியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.