சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 01.01.2023 முதல் 27.12.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 460 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி

குற்றங்களில் ஈடுபட்ட 120 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 92 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 14 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் படுத்திய 5 குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 1 குற்றவாளி மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 2 குற்றவாளிகள் என மொத்தம் 700 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கடந்த 21.12.2023 முதல் 27.12.2023 வரையிலான ஒரு வாரத்தில் தாய், மகன் உட்பட 13 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 8 குற்றவாளிகள் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் 1.தினேஷ்குமார், வ/28, த/பெ.சிவலிங்கம், திருவொற்றியூர், சென்னை என்பவர் கடந்த வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதற்காக H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்திலும், 2.தினேஷ், வ/24, த/பெ.பெரியசாமி, வியாசர்பாடி, சென்னை மற்றும் 3.தட்சணாமூர்த்தி, வ/51, த/பெ.சம்பத், கொருக்குபேட்டை, சென்னை ஆகிய இருவரும் கடந்த 02.12.2023 அன்று, கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, C-1 பூக்கடை காவல் நிலையத்திலும், 4.கார்த்திக் (எ) மிட்டாய் கார்த்திக், வ/23, த/பெ.பாபு, கோடம்பாக்கம், சென்னை என்பவர் கடந்த 19.11.2023 அன்று, கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலும், 5.சுந்தர் (எ) சுந்தரேசன், வ/25, த/பெ.ஈஸ்வரன், திருவல்லிகேணி, சென்னை என்பவர் கடந்த 30.11.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, E-2 ராயப்பேட்டை காவல் நிலையத்திலும், 6.கபிலன், வ/26, த/பெ.சேகர், சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம் என்பவர் கடந்த 27.11.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, S-7 மடிப்பாக்கம் காவல்
நிலையத்திலும், 7.ஜெயலட்சுமி, பெ/வ-44, க/பெ.முருகன், பிராட்வே ரோடு, சென்னை மற்றும் இவரது மகன் 8.முரளி, வ/22, த/பெ.முருகன், பிராட்வே ரோடு, சென்னை ஆகிய இருவரும் கடந்த 25.11.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, B-1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்திலும், 9.சாகுல் ஹமீது, வ/50, த/பெ.ஹபிப் முஹம்மது, கஞ்சிரான்குடி, இராமநாதபுரம் மாவட்டம் என்பவர் கடந்த 17.11.2023 அன்று வீடுபுகுந்து திருடிய குற்றத்திற்காக, R-6 குமரன்நகர் காவல் நிலைய குற்றப்பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
10.சந்தோஷ்குமார், வ/28, த/பெ.பாலகிருஷ்ணன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் என்பவர் கடந்த 25.11.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக, K-10 கோயம்பேடு காவல் நிலையத்திலும், 11.ருஷிகேஷ், வ/33, த/பெ.ராமகிருஷ்ணா ரெட்டி, பலமநேரி, சித்தூர் மாவட்டம் ஆந்திர மாநிலம் மற்றும் 12.திவாகர் ரெட்டி, வ/32, த/பெ.ராஜா ரெட்டி, பலமநேரி, சித்தூர் மாவட்டம் ஆந்திர மாநிலம் ஆகிய இருவரும் போலி கல்வி சான்றிதழ்கள் தயாரித்த குற்றத்திற்காக, மத்திய குற்றப்பிரிவு, மோசடி புலனாய்வு பிரிவிலும், 13.டேவிட், வ/24, த/பெ.பிரின்ஸ், வில்லிவாக்கம் என்பவர் 14.12.2003 அன்று கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தினேஷ்குமார், தினேஷ், தட்சணாமூர்த்தி, கார்த்திக் (எ) மிட்டாய் கார்த்திக், சுந்தர் (எ) சுந்தரேசன், கபிலன், ஜெயலட்சுமி, முரளி, சாகுல் ஹமீது ஆகிய 9 நபர்களை 23.12.2023 அன்றும், சந்தோஷ்குமார், ருஷிகேஷ், திவாகர் ரெட்டி ஆகிய 3 நபர்களை கடந்த 26.12.2023 அன்றும், டேவிட் என்பவரை நேற்றும் (27.12.2023) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 13 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.