7 நாளில் 23 பேர் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கை

125

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 181 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் கடத்துபவர்கள் பொருட்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2023 முதல் 19.05.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 118 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 39 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 12 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 6 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1 குற்றவாளி, பாலியல் தொழில் நடத்திய 4 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 181 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் கடந்த 13.05.2023 முதல் 19.05.2023 வரையிலான ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் 1.சிலம்பரசன், வ/21, த/பெ.தனசேகர், ஆறுமுக பிள்ளை தெரு, மயிலாப்பூர், 2.அஜித்குமார், வ/27, த/பெ.முருகதாஸ், ஏகாம்பரம் பிள்ளை தெரு, மயிலாப்பூர், 3.அஜித்குமார் (எ) கோரல், வ/23, த/பெ.சங்கர், முனுசாமி பிள்ளை தெரு, மயிலாப்பூர் ஆகிய 3 நபர்கள் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதால், E-1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். 4.கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி, வ/34 த/பெ.சுப்பராயன், சுனாமி குடியிருப்பு, கண்ணகி நகர் என்பவர் கண்மூடி முருகன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, J-9 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். கண்ணகிநகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது 1 கொலை, 1 கொலை முயற்சி, 1 கஞ்சா உட்பட பல குற்ற வழக்குகள் உள்ளது. 5.சிவா (எ) சிவபிரகாஷ், வ/24, த/பெ.பரமசிவம், மதியழகன் தெரு, உள்ளகரம், சென்னை என்பவர் கத்தியால் தாக்கி குற்றச் செயலில் ஈடுபட்டதால், S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது 1 கொலை முயற்சி உட்பட பல குற்ற வழக்குகள் உள்ளது. 6.அருண்குமார் (எ) பிங்கி, வ/25, த/பெ.சுகுமார், பவானி நகர், 9வது தெரு, வேளச்சேரி, 7.கஜபதி (எ) கஜா, வ/33, த/பெ.ராஜா, டிடிகே நகர் முதல் தெரு, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம் ஆகியோர் கத்தியால் தாக்கி குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

8.முரளி (எ) பாக்சர் முரளி, வ/26, த/பெ.கிருஷ்ணா, குருசாமி நகர் 1வது தெரு, புளியந்தோப்பு, 9.பார்த்திபன், வ/23, த/பெ.ரமேஷ், திருநாவுக்கரசு தோட்டம் 3வது தெரு, கொருக்குப்பேட்டை, 10.பாபு (எ) சரத்பாபு (எ) தனுஷ், வ/29, த/பெ.ராஜசேகர், அம்பேத்கர் நகர் 5வது தெரு, கொருக்குப்பேட்டை, 11.ஆகாஷ் (எ) ஆகாஷ் விஸ்வநாத், வ/24, த/பெ.வெங்கடேசன், வள்ளுவன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, 12.பூபதி, வ/34, த/பெ.குட்டியப்பன், பாடி குப்பம் ரோடு, திருமங்கலம், சென்னை ஆகியோர் 21.04.2023 அன்று குமார் (எ) கருப்பு குமார் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை கத்தியால் தாக்கி கொலை செய்தது தொடர்பாக, H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

பார்த்திபன் மீது 1 குற்ற வழக்கும், பாபு (எ) சரத்பாபபு மீது 1 கஞ்சா வழக்கும் ஆகாஷ் மீது 1 கொலை முயற்சி வழக்கும் உள்ளது. 13. தனசேகர் (எ) தனா, வ/42, த/பெ.ராமன், வால்டாக்ஸ் ரோடு, சென்னை 14.செந்தில்குமார், வ/30, த/பெ.வெங்கடேசன், பாண்டியன் தெரு, மீனம்பாக்கம், சென்னை 15.உதயகுமார் (எ) பர்மா உதயகுமார், வ/40, த/பெ.மதுரை, காமராஜர் காலனி, கோடம்பாக்கம், சென்னை 16.தினேஷ்ராஜன், வ/24, த/பெ.குமரவேல், கோபால் நகர், கருவம்பாளையம், திருப்பூர் மாவட்டம் 17.மோகன்ராஜ், வ/37, த/பெ.பாளையம், திருவள்ளுவர்புரம், மேற்கு தாம்பரம், சென்னை 18.ராகேஷ், வ/34, த/பெ.அசோகன், பாரதிதாசன் தெரு, எம்.ஜி.ஆர் நகர், சென்னை ஆகிய 6 நபர்களும் சேர்ந்து கடந்த 27.04.2023 அன்று ரமேஷ் (எ) முண்டக்குட்டி ரமேஷ் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திலும் 19.கார்த்திக் (எ) சொலுயூசன் கார்த்திக் வ/28, த/பெ.ராஜேந்திரன், ஒண்டிக்குப்பம் 2வது தெரு, திருவொற்றியூர், சென்னை என்பவர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதால் K-10 கோயம்பேடு காவல் நிலையத்திலும், 20.பிரசாந்த் (எ) டைசன், வ/23, த/பெ.கோபி, எண்.25, பெரியமேடு, சென்னை என்பவர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதால், G-1 வேப்பேரி காவல் நிலையத்திலும், 21.சூர்யா (எ) பெண்டு சூர்யா, வ/22, த/பெ. கோபால், எண்.38/39, திரு.வி.க.நகர், பள்ளம், புளியந்தோப்பு, சென்னை என்பவர் மீது K-2 அயனாவரம் காவல் நிலையத்திலும் 22.மகாதேவ் பிரசாத், வ/46, த/பெ.உமா சங்கர், எண்.27/1, பூந்தமல்லி ஹைரோடு, ஆதம்பாக்கம், சென்னை என்பவர் தொழில் தொடங்க முதலீடு பெற்று மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு EDF-1 லும் 23.ஐயப்பன், வ/33, த/பெ.மணி, எண்.10, பச்சையம்மன் கோயில் தெரு, அம்பத்தூர் என்பவர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதால், R-2 கோடம்பாக்கம் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். R-2 கோடம்பாக்கம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளியான இவர் மீது 1 கொலை வழக்கு உட்பட 19 வழக்குகள் உள்ளது.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி குற்றவாளிகள் சிலம்பரசன், அஜித்குமார், அஜித்குமார் (எ) கோரல், கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி, சிவா (எ) சிவபிரகாஷ், அருண்குமார் (எ) பிங்கி, கஜபதி (எ) கஜா, முரளி (எ) பாக்சர் முரளி, பார்த்திபன், பாபு (எ) சரத்பாபு (எ) தனுஷ், ஆகாஷ் (எ) ஆகாஷ் விஸ்வநாத், பூபதி, ஆகியோரை 15.05.2023 அன்றும், தனசேகர் (எ) தனா, செந்தில்குமார், உதயகுமார் (எ) பர்மா உதயகுமார், தினேஷ்ராஜன், மோகன்ராஜ், ராகேஷ், கார்த்திக் சொலுயூசன் கார்த்திக், பிரசாந்த் (எ) டைசன், சூர்யா (எ) பெண்டு சூர்யா, மகாதேவ் பிரசாத் ஆகியோரை 17.05.2023 அன்றும், ஐயப்பன் என்பவரை 18.05.2023 அன்றும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி 23 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.