சென்னை கொடுங்கை­யைூரில் ‘மெத்’­ போதைப்­பொ­ரு­ளுடன் 6 பேர் கும்பல் கைது

46

சென்னை, கொடுங்கையூரில் போதைப் பொருள் கடத்தி வந்த ரவுடி உட்பட 6 நபர்களை போலீசார் கைது செய்து 54 கிராம் மெத்தம்பெட்டமைன், 200 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஐ போன் உட்பட 5 செல்போன்கள் பறிமுதல் செய்­த­னர்.

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில், கொடுங்கையூர் ­போ­லீசார் நேற்று (23.02.2026) இரவு, கொடுங்கையூர், சின்னாண்டிமடம், T.H ரோடு சந்திப்பில் கண்காணித்தனர். அப்­போது, அங்கு சந்தேகப்படும்படி 2 இருசக்கர வாகனத்தின் அருகே, நின்று கொண்டிருந்த 6 நபர்களிடம் விசாரணை செய்தனர். அவர்களை சோதனை செய்தபோது, மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அத­னை­ய­டு­த்து போலீசார் கொடுங்­க­யூர் காந்தி நகர், ௨ ஆவது தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (33), மாதவரம் திருப்பதி (26), ஜோசப் (23), சின்னாண்டி மடம் வினோத்குமார் (26), ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 54 கிராம் மெத்தம்பெட்டமைன், 200 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள், ஐபோன் உட்பட 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் மணிகண்டன் மீது ஏற்கனவே 1 கொலை, 2 கொலைமுயற்சி, கஞ்சா உட்பட 20 குற்ற வழக்குகள் உள்ளதும், இவர் கொடுங்கையூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. எதிரிகள் ஆந்திரா மற்றும் பெங்களூரில் பெங்களூரில் இருந்து போதைப்பொருளை வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 6 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர் இன்று (24.02.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.