திமுக ஒன்­றியச் செய­லாளர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை: ஊராட்சி மன்றத் தலைவி, கார் டிரை­வர் கைது

128

தாம்பரம் மாநகர காவல், ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்குட்ட வண்டலூர் பகுதியில் வசித்து வந்த காட்டாங்குளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் (தி.மு.க) மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் V.S.ஆராமுதன் (56). கடந்த பிப்­­ர­வரி மாதம் 29ம் தேதி­ய­யன்று வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் மாலை 7 மணி­ய­ளவில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 8 நபர்கள் அவரின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 4 கொலை­யா­ளிகள் கடந்த 01.03.2024 ஆம் தேதி சத்தியமங்கலம் நீதிமன்றத்திலும், 04.03.2024 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் 4 பேரும் சரணடைந்தனர்.

எட்டு பேரையும் ஐந்து நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ததில் ஆரா­முதன் கொலை செய்­யப்­பட்­ட­தற்­கான காரணம் தெரி­ய­வந்­துள்­ளது. இறந்து போன ஆராமுதன் வண்டலூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக இரண்­­டு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த வந்த தேர்தலில் மேற்­கண்ட ஊராட்சி தாழ்த்தப்பட்ட மகளிர் தொகுதியாக்கப்பட்டதால் அப்பதவிக்கு முத்தமிழ்ச்செல்வி போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவியாக வெற்றி பெற்றார். அப்பதவியில் ஏற்ககனவே இருந்த ஆராமுதனுக்கு தி.மு.க-வில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பினும் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஆராமுதனுக்கு அனைத்து மரியாதைகளும் கிடைப்பதாக எண்ணி அவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் முத்­த­மிழ்ச்­செல்வி, ஆராமுதனை கொலை செய்ய தனது கார் டிரைவர் துரைராஜ் மூலமாக ரவுடி கனகராஜ் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு ரூ. 20 லட்சம் தருவதாகக் கூறி அவர்களை வைத்து திட்டமிட்டபடி கொலை செய்ததாக பர­ப­ரப்பு வாக்­கு­மூலம் அளித்­த­னர். அதனை­ய­டுத்து இன்று 18.-03.-2024 ஆரா­மு­தன் கொலை வழக்கில் முத்தமிழ்செல்வி மற்றும் அவரது டிரைவர் துரைராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டனர்.