தூத்துக்குடியில் தீபாவளி சிறப்பு பாதுகாப்பு: எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு

162

தீபாவளி திருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாளை (12.11.2023) தீபாவளி திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 2 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் சுமார் 800 போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உட்பட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் மாவட்ட எஸ்பி டாக்டர் பாலாஜி சரவணன் இன்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.