35 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

183

சென்னை நகரில் சிறந்த காவல் பணிபுரிந்த 35 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சிறந்த காவல் பணிபுரிந்த Serious Crime Squad (North) காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு, தலைமைக்காவலர்கள் சீராலன், ராஜராஜன், முதல் நிலைக்காவலர்கள் சிவகுமார், வேதஸ்ரீகுப்புராஜ், காவலர்கள் ராஜ்குமார், கட்டுப்பாட்டறை காவலர் திருமூர்த்தி, நவீன காவல் காவல் கரங்கள் காவல் ஆய்வாளர் மேரி ரஜு, சிறப்பு உதவி ஆய்வாளர் புனிதா, தலைமைக் காவலர்கள் மகேஷ்வரி, ராதிகா, லிசா, முதல் நிலைக்காவலர் கனகவள்ளி ஆகியோருக்கு இன்று நற்சான்றிதழ்கள் வழங்கினார்.

மேலும் மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் விஸ்வநாதன், உதவி ஆய்வாளர்கள் பிரவீன், ரபிக் உசேன், நவீன காவல் கட்டுப்பாட்டாறை உதவி ஆய்வாளர்கள் பிரபாகரன், இளையராஜா, தலைமைக்காவலர்கள் சந்திரகுமார், சுதாகர், புழல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணி, தலைமைக்காவலர்கள் எமரோஸ், குப்புசாமி, பழனிகுமார், முதல் நிலைக்காவலர்கள் கோபாலகிருஷ்ணன்,

ரமேஷ், காவலர் பிரவீன்குமார், மதுரவாயல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாவீது, ஊர்காவல் படை வீரர் பூங்காவணம், அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீனா, செம்பியம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகராஜ், கீழ்பாக்கம் காவல் நிலைய தலைமைக்காவலர் சரவணக்குமார், எம்ஜி.ஆர் நகர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் நாகராஜ், புனித தோமையர் மலை விரல் ரேகைப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைகண்ணகி ன 1 விரல் ரேகைப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 3 காவல் ஆய்வாளர்கள் 10 உதவி ஆய்வாளர்கள், 22 காவல் ஆளிநர்கள் என மொத்தம் 35 காவல் அதிகாரிகளை இன்று (25.11.2023) நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.

மேலும் யானைகவுனி பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோவில் பணம் ரூ. 2 கோடியே 1 லட்சம் எடுத்து வந்த 3 நபர்களை பணத்துடன் பிடிக்க தகவல் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் செம்பியத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ், 39 என்பவரையும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.