38 அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நற்சான்றிதழ்

166

சென்னை நகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 38 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலருக்கு மாதாந்திர நட்சத்திர காவல் விருது வழங்கி கமிஷனர் கவுரவித்தார்.

 

சென்னை நகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் ஆப்ரஹாம் குரூஸ் என்பவருக்கு செப்டம்பர் மாதத்திற்கான காவல் நட்சத்திர விருது மற்றும் J-3 கிண்டி காவல் நிலைய தலைமைக் காவலர் மோகன் என்பவருக்கு அக்டோபர் மாதத்திற்கான காவல் நட்சத்திர விருது மற்றும் இருவருக்கும் வெகுமதி தலா ரூ.5,000- வழங்கி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினார்.

மத்தியக் குற்றப்பிரிவு, ஆவணங்கள் மோசடி பிரிவு (EDF) காவல் ஆய்வாளர் ஆப்ரஹாம் குரூஸ் என்பவர், EDF பிரிவில் புலன் விசாரணையில் இருந்த 2 முக்கியமான வழக்குகள் உட்பட 20 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயார் செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கிண்டி காவல் நிலைய தலைமைக் காவலர் மோகன் 25.10.2023 அன்று மதியம், ஆளுநர் மாளிகை வாசலில் பணியிலிருந்தபோது, அங்கு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீச முயன்ற நபரை மடக்கிப் பிடித்து, அசம்பாவிதம் நிகழாமல் தடுத்துள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த மத்திய குற்றப்பிரிவு, மோசடி புலனாய்வு பிரிவு, காவல் உதவி ஆணையாளர் சச்சிதானந்தம், பெண் காவல் ஆய்வாளர்கள் சீஜா ராணி, ஜெயா வனிதா, உதவி ஆய்வாளர்கள் ரவிந்திரன், கீர்த்தனா, விஜயசேகர், ஜெகதீசன், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையாளர் கிருத்திகா, காவல் ஆய்வாளர்கள் இளையராஜா, வினோத்குமார், உதவி ஆய்வாளர்கள் முகமது அன்சார், கார்த்திகேய வெங்கடாச்சலபதி, சரண்யா, சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயந்தன், செல்வராஜ், பெண் காவலர் சகுந்தலா புனித தோமையர்மலை துணை ஆணையாளரின் அதிரடிப்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் வெங்கடேசன், ஆயுதப்படையைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர்கள் விக்னேஷ், காவலர்கள் காளிமுத்து, செல்வகணபதி, அரவிந்த், ஸ்ரீஜித், கவிஷ்குமார், மகேஷ்குமார், தனவேல் ஆகியோர் நற்சான்றிதழ் பெற்றனர்.

மேலும் புளியந்தோப்பு காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பாளர்/ உதவி ஆய்வாளர் முனுசாமி, வாகன ஓட்டுநர்/ ஆயுதப்படை காவலர் வேலன் என மொத்தம் 38 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (16.12.2023) நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.

மத்திய குற்றப்பிரிவு, மோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினர், போலியான கல்வி சான்றிதழ்கள் தயாரித்த கும்பலைச் சேர்ந்த 4 நபர்களை கைது செய்தும், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் குழுவினர் குற்றவாளிகளை விரைந்து பிடித்து, களவு சொத்துக்களை மீட்டும், புனித தோமையர்மலை அதிரடிப்படை காவல் குழுவினர் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் தவித்த 80 வயது மூதாட்டி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளை மீட்டும், P-1 புளியந்தோப்பு ரோந்து வாகன காவல் குழுவினர். வாகன சோதனையின்போது 5 கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றவாளியை பிடித்தும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

கடந்த 06.11.2023 முதல் 01.12.2023 வரை சென்னையில் நடைபெற்ற 66வது தமிழ்நாடு காவல் பணித்திறனாய்வு போட்டியில், பதக்கங்கள் பெற்ற சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் வஹிதா பேகம், D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலையம் (விரல்ரேகை பிரிவில் 1வது இடம் மற்றும் அறிவியில் ரீதியான விசாரணை பிரிவில் 2ம் இடம்) காவல் உதவி ஆய்வாளர்கள் மனோஜ்குமார், தனசேகரன், J-8 நீலாங்கரை கா.நி., ஆகிய இருவரும் கணினி விழிப்புணர்வு நிகழ்ச்சி திறன் பிரிவில் 1வது இடமும், தலைமைக் காவலர்கள் 4.திரு.S.நாகராஜன் (த.கா.20935), K-7 ஐசிஎப் போக்குவரத்து கா.நி., என்பவர் நாசவேலை சோதனை பிரிவின் 2 பிரிவுகளில் 2வது இடமும், 5.திரு.C.வேலாயுதம் (த.கா.26283), R-4 சௌந்தரபாண்டியனார் அங்காடி கா.நி., 6.திருமதி.D.வித்யா (பெ.கா.52782), புனித தோமையர்மலை ஆயுதப்படை ஆகிய இருவரும் கவனிப்பு பிரிவில் (Observation) 1வது மற்றும் 3வது இடமும், 7.திரு.S.பிரபாகரன் (மு.நி.கா.46305), மோப்பநாய் பராமரிப்பாளர், மோப்பநாய் பிரிவில் 3வது இடமும், 8.திரு.T.கிருஷ்ணமூர்த்தி (கா.48854), நவீன கட்டுப்பாட்டறை என்பவர் கணினி விழிப்புணர்வு தானியங்கி பிரிவில் 2வது இடமும், மூத்த புகைப்பட நிபுணர் 9.திரு.B.மோகன்ராஜ் என்பவர் புகைப்பட பிரிவில் 1வது இடமும், பெற்று, 5 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கங்கள் மற்றும் 2 கேடயங்கள் பெற்று, சென்னை பெருநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்தனர்.

மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் 66வது தமிழ்நாடு காவல் பணித்திறனாய்வு போட்டியில் வென்ற மேற்படி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.