இன்று நடந்த பொதுமக்கள் குறை தீர் முகாமில் 16 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

வாரந்தோறும் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து கமிஷனர் அருண் புகார் மனுக்களை பெற்று வருகிறார். அந்த வகையில், இன்று 10.09.2025 நடந்த பொதுமக்கள் குறை தீர் முகாமில் மொத்தம் 16 பொதுமக்களிடம் புகார் மனுக்களை கமிஷனர் அருண் நேரில் பெற்றார். அந்த புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.