முதன் ­மு­றை­யாக பொரு­ளா­தார குற்­ற­வாளி மீது அதி­ர­டி: 9 மாதங்­களில் 41 பேர் மீது குண்டாஸ்: கரூர் மாவட்ட காவல்­துறை நட­வ­டிக்­கை

243

கரூர் மாவட்­டத்தில் முதல்முறையாக பொருளாதார குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­து. கடந்த 9 மாதங்­களில் 41 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்­துள்­ள­து.

கரூர் மாவட்டம், கட­வர், நாயக்­கனூர் பகு­தியைச் சேர்ந்­தவர் முருகேஷ் என்­கிற முருகேசன் (வயது 34). இவர் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து ரூ. 3,30,000 ஏமாற்றியுள்ளார். இது தொடர்­பாக குளித்­தலை, சிந்தாமணிபட்டி போலீசார் முரு­கேசன் மீது மோசடி உள்­ளிட்ட 7 பிரி­வு­களின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்து கடந்த 27.08.2025 அன்று கைது செய்­த­னர். அவரிடம் இருந்து இன்­­னோவா கார், நிலப்பத்திரம் பறி­முதல் செய்­யப்­பட்டு கோர்ட்டில் ஆஜர்­ப­டுத்தப்­பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நிதி நிறுவன மோசடிகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கடந்த 08.07.2025 ஆம் தேதி பொருளாதார குற்றவாளிகளை (Economical offender) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்பு காவலில் அடைக்கலாம் என்று அரசாணை பிறப்பித்தது. அத­னை­ய­டுத்து முரு­கே­ச­னை குண்டர் சட்­டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி ஜோஷ் தங்கையா கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் தங்கவேலுவுக்கு ப­ரிந்­துரை செய்தார். அதன் பேரில் பொருளாதார குற்றவாளி முரு­கே­சனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்­த­ர­விட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் 45 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர். மேலும் 2025 ஆம் ஆண்டில் இதுவரை சட்டம் ஒழுங்குக்கு கேடு விளை­வித்த 23 குற்றவாளிகள், வழிப்பறியில் ஈடுபட்ட 10 பேர், போதைப் பொருள் கடத்தல் தொடர்­பா­க 2 பேர், சைபர்­கிரைம், மணல் கடத்தல், மது­பாட்­டில் கடத்­திய மூவர், போக்சோ பிரிவில் 3 பேர் என மொத்தம் 41 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்­துள்­ள­து குறிப்­பி­டத்­தக்­க­து