பொதுமக்களின் 47 புகார் மனுக்கள் மீது விரைந்து நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­வு

152

பொதுமக்களின் 47 புகார் மனுக்கள் மீது விரைந்து நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

முதல்வர் ஸ்டாலின் உத்­த­ரவின்படி போலீஸ் கமி­ஷனர் அருண் வாரம் தோறும் புதன்கிழமை அன்று பொது­மக்­களை நேரில் சந்­தித்து புகார் மனுக்­களை பெற்று வரு­கிறார். இதன் தொடர்ச்சியாக கமி­ஷனர் அருண் நேற்று சென்னை போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், பொதுமக்களின் 47 புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின்போது தலை­மை­யிட துணை ஆணை­யாளர் மேக­லினா உடன் இருந்­தார்.