காவலர் குறைதீர் முகாமில் 199 மனுக்­க­ள் மீது உடனடி நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண் உத்­த­ர­வு

102

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலு­வ­லகத்தில் இன்று நடந்த காவலர் குறை தீர் சிறப்பு முகாமில், காவல் ஆணையர் அருண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 199 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் இன்று (25.10.2024) மதியம் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்‘‘ சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து 199 குறைதீர் மனுக்களை பெற்றார். இந்த முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட 199 மனுக்களை பெற்று, இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த முகாமில், சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர்கள் கபில்குமார் சரட்கர், (தலைமையிடம்), நரேந்திரன் நாயர் (வடக்கு), காவல் இணை ஆணையாளர்கள் விஜயகுமார் (மேற்கு மண்டலம்), கயல்விழி (தலைமையிடம்), துணை ஆணையாளர் (தலைமையிடம்) மேகலீனா ஐடன், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.