சென்னை திரு­வல்­லிக்­கேணி பெண்­ணிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மிரட்டல்: கும்­ப­கோணம் ஆசாமி உள்­பட இருவர் கைது

144
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் பெண்ணின் பெயரில் பார்சலில் போதைப்பொருள் வந்திருப்பதாவும், டிஜிட்டல் கைது  செய்வதாக கூறி  மிரட்டி பெண்ணிடம்  ரூ.1.16 லட்சம்  பறித்த வழக்கில்  2 நபர்களை திரு­வல்­லிக்­கேணி போலீசார்  கைது செய்­த­னர்.
சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த  ரிஸ்வானா பேகம் (வயது 59) என்பவரிடம் 03.02.2024 அன்று அடையாளம் தெரியாத நபர்கள் செல்­போனில் பேசியுள்­ளனர்.  சுங்கத்துறையில் இருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் போதைப்பொருள் பார்சல் வந்துள்ளது, இதன் விபரத்தை காவல் துறைக்கு தெரிவித்து விட்டோம், காவல்துறையிலிருந்து தொடர்பு கொள்வார்கள் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். வேறு ஒரு எண்ணில் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம்  தொடர்பு கொண்ட நபர்  ஒருவர் காவலர் சீருடையில்  மேற்படி ரிஷ்வான பேகம் மற்றும் அவரது மகனிடம் டிஜிட்டல் கைது செய்வதாக கூறி மிரட்டியுள்ளார். மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் அனுப்பும் படி கூறியுள்ளார். இதனை நம்பிய ரிஷ்வான பேகம் பல தவணைகளாக ஆன்லைன் மூலம் ரூ.1.16 லட்சம் பணபரிவர்த்தனை செய்துள்ளார்.  சில நாட்களுக்கு பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரிஷ்வான பேகம் இது குறித்து  திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
திரு­வல்­லிக்­கேணி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், திருவல்லிக்கேணி காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருடன் ஒருங்கிணைந்து தீவிர விசாரணை செய்து தஞ்­சாவூர், கும்­ப­கோ­ணத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (42), சென்னை மேட­வா­க்­கத்­தைச் சேர்ந்த முகமது யூனிஸ்  (37) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் 1 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் வெங்கடேஷ் முகப்பேரை சேர்ந்த அவரது  நண்பருடன் சேர்ந்து சென்னை, துரைப்பாக்கத்தில் Man Power Agency நடத்தி வந்துள்­ளார். ­அந்த தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் நண்பர் கம்போடியா சென்றுவிட்டார். அவர் வெளிநாட்டிலிருந்து டெலிகாலிங் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு டிஜிட்டல் கைது செய்வதாக கூறி பணம் பறித்து வந்­துள்ளார். , பறித்த பணத்தை வெளிநாட்டிலிருந்து வெங்கடேஷ் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளதும், வெங்கடேஷ் அந்தப்பணத்தை வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி பணப்பரிவர்த்தனை செய்து கொடுத்துள்ளதும் தெரியவந்தது. மேலும் வெங்கடேஷ், கம்போடியாவில் வசிக்கும் நண்பர் கேட்டுக் கொண்டதின் பேரில் மேற்படி முகமது யூனிஸ் உடன் சேர்ந்து டெலி காலிங் மொபைல் ஆப் தயார் செய்து அனுப்பியுள்ளதும் தெரியவந்தது.
  மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை  தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ், முகமது யூனுஸ் இருவரும் இன்று (02.03.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு   சிறையில்அடைக்கப்பட்டனர்.