வௌிநாட்டு ஓட்­டல்­களில் பாலியல் தொழி­லுக்கு தமி­ழக பெண்­களை அனுப்பி வைத்த கில்­லாடி ‘பிம்ப்’களை அள்­ளிய சென்னை விப­சா­ரத் ­த­டுப்­புப்­பி­ரிவு போலீ­ஸ்

186

வெளிநாட்டு ஓட்­டல்­களில் பாலியல் தொழிலுக்கு பெண்­களை அனுப்பி வைத்த 3 புரோக்கர்­களை சென்னை விப­சாரத் தடுப்­புப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர்.

சென்னை மற்றும் தமி­ழ­கத்தின் பிற மாவட்டங்களில் வறுமையில் வாடும் இளம்­­பெண்­களை மூளைச்­ச­லவை செய்து அவர்­களை விபச்­சா­ரத்தில் தள்ளி புரோக்கர்கள் பெரும் பணம் சம்­பா­தித்து வ­ரு­கின்­றனர். அவர்­களை மாறு­வே­டத்தில் கண்­ட­­றிந்து கைது செய்ய சென்னை நகர விப­சா­ரத்­த­டுப்­பி­ரிவில் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் உத்­த­ரவின் பேரில் கூடுதல் கமி­ஷனர் செந்தில்­கு­மாரி மேற்­பார்­வை­யில் உ­த­விக்­க­மி­ஷனர் ராஜ­லட்­சுமி தலை­மையில் சிறப்புத் தனிப்­ப­டைகள் அமைக்­கப்­பட்­டுள்­ள­ன. தனிப்­ப­டை­யி­னரின் விசா­ணையில் அதிர்ச்சித் தக­வல்கள் வௌியா­கின.

சென்னை நகரில் வேலை தேடும் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் அவர்­களை விபச்­சா­ரத்தில் தள்ளி லட்­சக்­க­ணக்கில் பணம் சம்­பா­திப்பது தெரி­யவந்­த­து. துண்டு பிரசுரங்கள் மூலம் துபாய், சிங்­கப்பூர், மலே­சியா உள்­ளிட்­ட வெளிநாடுகளில் உள்ள ஓட்டல்களில் கைநி­றைய சம்­ப­ளத்தில் வேலை இருப்பதாக இந்த கும்பல் விளம்பரப்படுத்துகின்­றனர். அதன் மூலம் அவர்களை தொடர்பு கொள்ளும் பெண்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கே கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்துவதும் தெரி­ய­வந்­த­து.

அத­னை­ய­டுத்து தனிப்படை போலீசார் விப­சார புரோக்கர்கள் மடிப்­பாக்கம் பிரகாஷ்ராஜ் (24), தென்­காசி ஜெயகுமார் (40), துரைப்­பா­க்கம் ஆபியா (24) ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், வெளிநாட்டு வேலைக்கான விளம்பர துண்டுப் பிரசுரங்கள், பெண்களிடமிருந்து பெறப்பட்ட கைரேகை அல்லது கையொப்பமிட்ட கடன் பத்திரங்கள் மற்றும் ஒப்பந்த பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்­ள­ன. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 4 முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்­கொண்டு வருகின்­ற­னர். கைது செய்யப்பட்ட மூவரும் இன்று (30.5.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்­கப்­பட்­டனர்.