சிறந்த மருத்துவசேவை: கலெக்டரிடம் குடியரசு தின விருது பெற்ற டாக்டர் கிங்ஸ்டன்

190

பொது அறுவை சிகிச்சையில் சிறந்த செயல்திறனுக்காக டாக்டருக்கு செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விருது வழங்கி கவுரவித்தார்.

குடியரசு தினத்தன்று சிறந்த பணிபுரிந்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சையில் சிறந்த செயல்திறனுக்காக டாக்டர் கிங்ஸ்டனுக்கு குடியரசு தின சிற்பபு விருது வழங்கி கலெக்டர் ராகுல்நாத் பாராட்டினார். டாக்டர் கிங்ஸ்டன் செங்கல்பட்டு, சதுரங்கப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். டாக்டர் கிங்ஸ்டனின் சிறந்த மருத்துவ சேவையை பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.