ஆவடி காவல் ஆணையரக எல்லையில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் கமிஷனர் சங்கர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.

திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் நடந்த இக்கூட்டத்தில், தொழில் நிறுவனங்கள் சட்டவிரோத நபர்கள் மற்றும் அப்பகுதி மக்களால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக தீர்வு காண்பது குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டன. அவற்றுக்கு எப்படி தீர்வு காண்பதற்குறிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆவடி போலீஸ் துணைக்கமிஷனர் அய்மன் ஜமால் மற்றும் காவல் அதிகாரிகள், கூட்டமைப்பின் நிர்வாகிகள், மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.