நீங்க ரோடு ராஜாவா ? விக்னேஷ் சிவன் இயக்கிய போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

207

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சென்னை நகர போக்குவரத்து காவல்துறை சார்பாக ”நீங்க ரோடு ராஜாவா?” என்ற குறும்படம் கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

சென்னை நகரில் பேோலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தேோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர் மேற்பார்வையில் விபத்துக்களை குறைக்கும் நேோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கெொள்ளப்பட்டு வருகிறது. சாலைகளில் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதிசெய்யவும், யு திருப்பங்கள், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள், பள்ளி பாதுகாப்பு மண்டலங்கள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு முயற்சிகள் காரணமாக, சென்னை நகர போக்குவரத்து காவல்துறை விபத்துகளில் அளவை குறைத்து வருகிறது. மேலும் போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்வதின் மூலமாகவும் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு முயற்சிகள் மூலமாகவும் மரண விபத்துக்கள் அதிகரிக்காமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகள் பற்றி அறிவூட்டும் வகையில் சென்னை நகர போக்குவரத்து காவல்துறை உடன் ஒருங்கிணைந்து திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் “NEENGA ROAD RAJA VA” நேற்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையால் வெளியிடப்பட்டது. போக்குவரத்து காவல் கூடுதல் கமிஷனர் சுதாகர் முன்னிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயாரும் முன்னாள் காவல் ஆய்வாளருமான மீனாகுமாரி ஆகியேோர் இந்த குறும்படத்தை வெளியிட்டனர்.

போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகன ஓட்டிகள் தவறான வழிகளிலிருந்து வாகனத்தை இயக்குவது குறித்த விழிப்புனர்வும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதையும் தடுக்கும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதற்கான நுண்ணறிவுகளை வழங்கும் மற்றொரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் யோகி பாபு, சாந்தனு பாக்யராஜ், பகவதி பெருமாள், அர்ச்சனா, அப்துல் லீ மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் போக்குவரத்து காவல்துறை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் தெற்கு இணைக்கமிஷனர் மகேஷ் குமார் மற்றும் துணைக்கமிஷனர்கள் பாஸ்கரன், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கணிசமாக குறைந்த விபத்துக்கள்

2021 ஆம் ஆண்டில் சென்னை பெருநகரில் விபத்தின் இறப்பு எண்ணிக்கை 573 ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 204 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதால் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இது 50% ஆகும். கடந்த ஆண்டு 2023ல், இது 196 ஆக குறைக்கப்பட்டு 38% ஆக குறைந்துள்ளது. தவறான பாதையில் வாகனம் ஓட்டுவது (Wrong side drive) தொடர்பாக சிறப்பு நடவடிக்கையாக 2023ஆம் ஆண்டில் விதிமீறல் செய்பவர்கள் மீது மொத்தம் 60,181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, சாலைப் பாதுகாப்பு நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு சென்னை பெருநகரம் முழுவதும் 100 பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன. இதில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுமார் 7200 மாணவர்களை சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.