வேலூர் மாவட்டத்தில் புதிய அறிமுகமாக Cell Tracker 9486214166 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு “HI” என டைப் செய்து மெசேஜ் அனுப்பினால் போதும் புகார் ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த எண்ணில் அளிக்கப்படும் புகார்கள் நேரடியாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சையர் செல் பிரிவில் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் டிஐஜி முத்துசாமி தெரிவித்துள்ளார். இந்த வசதியை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, எஸ்.பி மணிவண்ணன் ஆகியோர் இன்று (03.07.2023) அறிமுகம் செய்துவைத்தனர்.