தமிழ்நாடு முதலமைச்சர் பெயரில் போலி AI ‘டீப் பேக்’ வீடியோவைப் பரப்பிய நபரை சிபிசிஐடி போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர்.
முதல்வர் விஜய் புகைப்படம் மற்றும் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலியாக உருவாக்கி அதனை இணையத்தில் பரப்பி வைரலாக்குவது தற்போது வழக்கமாகி வருகிறது. அது தொடர்பாக சிபிசிஐடி சைபர்கிரைம் போலீசார் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சிபிசிஐடி, சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்கமான இணையவழி கண்காணிப்பின் போது, முதல்வர் விஜய் போன்று உருவகப்படுத்தி, இந்தி குரல் வடிவத்துடன் கூடிய AI மூலம் உருவாக்கப்பட்ட ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள் பேஸ்புக்கில் பரப்பப்பட்டது கண்டறியப்பட்டது.
அந்த வீடியோக்களில், நிதி உதவி பெற ஒரு வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டிருந்தது. அது போலியானது என்பதால் அது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 202, 318 (2) உள்பட 7 பிரிவுகளின் கீழ் கடந்த 1ம் தேதியன்று வழக்குப்பதிவு செய்தனர். மோசடி செய்பவர்கள் இந்த Al வீடியோக்களைப் பயன்படுத்தி மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பலரை ஏமாற்றியுள்ளதும், இந்த டீப் பேக் Al வீடியோக்களை நீக்கியதுடன், சேவை வழங்குநரிடமிருந்து தகவல்களைப் பெற்ற சிபிசிஐடி, டிஜிட்டல் ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்து, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சந்தேக நபர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீஸ் இரண்டு தனிப்படைகள் பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான காவல் ஒருங்கிணைப்பு மூலம் கைது நடவடிக்கை திட்டமிடப்பட்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்க ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ராஜஸ்தான் காவல்துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டம், லட்சுமண்கர், பூந்தோலியைச் சேர்ந்த ஜூஹூர் கானின் மகன் ஷயாபு கான் (28) என்பவர் 12.09.2026 அன்று ஆல்வார் மாவட்டத்தின் உட்பகுதியில் கைது செய்யப்பட்டார். குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், சிம் கார்டுகள் மற்றும் சிபியு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான குற்றவாளி ராஜஸ்தானில் இருந்து பி.டி. வாரண்ட் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
மேலும் குற்றவாளியின் டிஜிட்டல் தடங்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்த போது மத்தியப் பிரதேசத்தில் இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவரை சிபிசிஐடி கண்டறிந்தது. அவரின் வாக்குமூலம் மற்றும் அவர் கொடுத்த ஆதாரங்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ஷயாபு கானுக்கு எதிராக வழக்கைப் பலப்படுத்த உதவி புரிந்துள்ளன. ஷயாபு கான் தனியாகச் செயல்பட்டாரா அல்லது ஏதேனும் பெரிய நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகச் செயல்பட்டாரா என்பதைக் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற பல வீடியோக்கள் பாகிஸ்தானைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பேஸ்புக் ஐடிகளில் பகிரப்பட்டு வந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சவால்கள் இருந்த போதிலும், வெளிநாட்டு குற்றவாளிகளைக் கண்டறியவும், அவர்களுக்கு உள்ளூர் அளவில் உதவியவர்களை வெளிக்கொண்டு வரவும் தீவிர டிஜிட்டல் விசாரணை நடைபெற்று வருகிறது. தொழில் நுட்பம் எவ்வளவு முன்னேறியதாக இருந்தாலும், குற்றவாளிகளின் மறைவிடங்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், சட்டத்தின் செயல்பாடானது எப்போதும் மோசடியை விட வேகமாகச் சென்றடையும் என்ற தெளிவான செய்தியை இந்த அதிரடி நடவடிக்கை உணர்த்தியுள்ளது.
குற்றவாளியை திறமையாக கைது செய்த சிபிசிஐடி சைபர்கிரைம் போலீஸ் தனிப்படையினர டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார். தமிழ்நாடு காவல்துறையின் சார்பில், பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், போலி வீடியோக்களில் பரப்பப்படும் தொலைபேசி எண்களுக்குப் பதிலளிக்கவோ, வாட்ஸ்அப் குழுக்களில் இணையவோ வேண்டாம் என்றும், மேலும் இந்த வகை ஆன்லைன் மோசடிகள் குறித்துத் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும்