ரூ. 100 கோடி லஞ்­சம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது: சென்னை சிசிபி போலீசார் நட­­வ­டிக்­கை

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி 100  கோடி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இன்­று கைது செய்­யப்­பட்­டார்.

தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்­தினர். இந்த வழக்கில் தொடர்புடைய பிடி அரச குமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ், பிரகாஷ் மற்றும் முத்துகுமாரின் உறவினர்களான சரவணன், ரமேஷ், கோகுலகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு சொந்தமான திருச்சி, சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலங்களில் சோதனை செய்து ஆவணங்கள் மற்றும் மின்னனு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்­கி­டையில் இந்த வழக்கில் முன்­ஜா­மீன் கேட்டு அன்­பில் மகேஷ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்­தி­ருந்தார். அதனை கோர்ட் தள்­ளு­படி செய்­த­து.

இந்­நி­லையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் இன்று (26.10.2026) முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை அமைந்தகரையில் வைத்து கைது செய்து, காவல் ஆணையரகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

Comments (0)
Add Comment